
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பொருத்தமில்லை என்றால் மக்களை அணி திரட்டி தெளிவு படுத்துங்கள் என எதிர்க்கட்சியினரை பார்த்து கேட்டுக் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சூழ்ச்சிகளை செய்ய வேண்டாம் அதற்கு இடமில்லை என்றார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி, தனக்கு கதவு திறக்கும் சத்தமும் பேரே (மேளம் போன்ற இசைக்கருவி) சத்தமும் தெளிவாக கேட்கும் என்றார்.