அண்மையில், கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு, வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, வியட்னாம் தூதுவராலயம் சார்பாக, இன்று, குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியை சேர்ந்த, 32 வயதுடைய சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற குடும்பஸ்தரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், பொருளாதார சூழல் காரணமாக, புலம் பெயர முயற்சித்ததாக, குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு, ஆறு மாத பெண் குழந்தையும் இருக்கின்றது.இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழி தெரியாது குடும்பத்தினர் தவித்து வருவதுடன், சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.