கனடா கடந்த ஆண்டு உலக அளவில் வெப்ப வாயுக்களை அதிகம் வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் நான்காம் நிலையைப் பிடித்துள்ளது. கனடாவில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவு காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்பட்டது அதற்குக் காரணம்.
காட்டுத்தீச் சம்பவங்களால் கனடாவில் மொத்தம் 15 மில்லியன் ஹெக்டர் பரப்பளவு நிலம் அழிந்துபோனது. 200,000க்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேறினர். கனடாவில் கடந்த மே மாதத்திற்கும் செப்ெடம்பருக்கும் இடையில் 2,300 மெகாதொன் கரியமில வாயு வெளியேற்றப்பட்டது.
மிக அதிகமாக வெப்ப வாயுக்களை வெளியேற்றிய நாடுகளில் முதல் மூன்று நிலைகளில் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை உள்ளன. நேச்சர் சஞ்சிகை நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.