கம்போடியாவின் அங்கோர்வாட் கோவில் வளாகம், இந்து மற்றும் புத்தமத வழிபாட்டு தலம் ஆகும்.
அந்த கோவிலை உள்ளடக்கிய அங்கோர் பகுதியின் 400 சதுர கி.மீ. பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. அங்கோர்வாட் கோவில் வளாகத்தில் கடந்த 1927 ஆம் ஆண்டு ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவில் வளாகத்தில் கம்போடியா நிபுணர்களும், இந்திய நிபுணர்களும் நடத்திய அகழாய்வின்போது, புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது.இந்த உடற்பகுதி சிலை ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியுடன் பொருந்துவதாக தெரிவிக்கப்படுகிறது. தலைப்பகுதி இருந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.