கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸை வெளியேற்றியது கண்டி பெல்கன்ஸ்

0
68

கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் முதலாவது தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா கிங்ஸை 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்ட கோல் மார்வல்ஸ் முதல் அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மிகவும் பரபரப்பான நீக்கல் போட்டியில் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா கிங்ஸை எதிர்த்தாட கண்டி பெல்கன்ஸ் தகுதிபெற்றது.

முதலாவது தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 178 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.