காசாவின் தெற்குப் பகுதியான பெனி சுஹைலா நகரில் இஸ்ரேல் படைகள் நடாத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் போர் புரிந்து வரும் இஸ்ரேல் ராணுவம் கடந்த 10 நாட்களாக வடக்கு காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
வடக்கு காசாவிற்குள் எந்த நிவாரண பொருட்களும் நுழைய முடியாதபடி முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் இராணுவம், அங்குள்ள மக்கள் எங்கும் வெளியேற முடியாதவாறு வீடுகள், முகாங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவை முற்றிலும் அழிக்கும் முயற்சியை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை விரிவுப்படுத்தியது.
தெற்கு காசாவின் பெனி சுஹைலா நகரில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.
பக்காரி நகரில் வீட்டின் மீது வீசப்பட்ட குண்டுவீச்சில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.