காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கஹகட்டகஸ்திகிலிய , தம்பகொல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 60 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானை தாக்கியதில் இந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திவுல்வெவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.