காணாமல்போன மகனை தேடிவந்த தந்தை மரணம்

0
205

இறுதி யுத்தத்தின்போது காணாமல்போன தனது மகனை, 12 ஆண்டுகளுக்கு மேலாக தேடிவந்த தந்தை ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தை சேர்ந்த, முனியாண்டி கறுப்பையா என்ற தந்தை, கடந்த கால யுத்தத்தின் போது, தனது மகனான மோகனதாஸ் காணாமல் போன நிலையில், அவரை தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று, காணாமல் போன மகனை தேடிய தந்தை உயிரிழந்துள்ளார்.