யாழ்ப்பாணம் பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புப்படைத் தலைவர்களிடம் ஆலோசனை பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்யாமல் காணிகளை பகிர்ந்தளிப்பது அபாயகரமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.