பருத்தித்துறை – தும்பளை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். தும்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி பெண் வீட்டில் இருந்த வேளையில், வீட்டை கொள்ளையிடும் நோக்கில் வந்த நபரொருவர் பெண்ணை பொல்லால் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதோடு, சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.