காலி பூஸா சிறைச்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீட்பு

0
74

காலி பூஸா சிறைச்சாலையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகளை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின் போது, சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதியிடம் இருந்து, கையடக்கத் தொலைபேசிகள், சார்ஜர்கள், பட்டரிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.