கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் : நிர்மாணப்பணிகள் விரைவில்!

0
13

திருகோணலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபை பிரிவில் உள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு வசதியாக அமையும் குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக, 10.5 மில்லியன் டொலர் நிதித்தொகை ஒதுக்கப்படவுள்ளது.

பேராதனை மற்றும் பதுளை செங்கலடி வீதியின் புனரமைப்பு வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், மீதியிருக்கும் தொகையை இதற்காக ஒதுக்குவதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தம், நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் சவூதி அபிவிருத்தி நிதிநயத்தின் சட்ட பணிப்பாளர் அப்துல் மொசன் ஏ.அல்முல்லா ஆகியோர் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இத் திருத்தப்பட்ட ஒப்பந்தம் மூலம் பதுளை செங்கலடி வீதி அபிவிருத்தித் திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் எஞ்சிய நிதி வீதி வலையமைப்பு அபிவிருத்தி பணிகளுக்கு மாற்றப்பட்டு, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன்
இந்த பாலம் நிர்மாணிக்கப்படுவதால் போக்குவரத்து பிரச்சனைகள் தீரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.