கிறீஸின் முன்னாள் மன்னர் 2 ஆம் கொன்ஸ்டான்டைன் தனது 82 ஆவது வயதில் நேற்று காலமானார். கிறீஸின் தலைநகர் ஏதென்ஸிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1964 ஆம் ஆண்டு தனது 23 ஆவது வயதில் கிறீஸ் மன்னராக 2 ஆம் கொன்ஸ்டான்டைன் பதவியேற்றார். 1967 ஏப்ரலில் இராணுவப் புரட்சியையடுத்து மன்னர் 2 ஆம் கொன்ஸ்டான்டைனின் அதிகாரிகள் குறைக்கப்பட்டன. மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்த பின் 1967 டிசெம்பரில் அவர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். 1973 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சியாளர்களால் முடியாட்சி ஒழிக்கப்படும்வரை அவர் சம்பிரதாயபூர்வமாக மன்னராக பதவி நீடித்தார். இவர் ஒலிம்பிக் படகோட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னர் 2 ஆம் கொன்ஸ்டான்டைன், பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸின் உறவினரும் ஆவார்.