கிளி. பூநகரி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

0
205

கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபையின் அமர்வு காலை 10.00மணிக்கு சபையின் தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சபையில் தவிசாளர் முன்வைத்தார். தொடர்ந்து நிறைவேற்றுவதற்காக உறுப்பினரின் ஆதரவு கோரப்பட்டு, வாக்குகெடுப்பு இடம்பெற்றது. வாக்கெடுப்பில் ஒரு உறுப்பினர் சுகயீனம் காரணமாக சமூகம் அளிக்கவில்லை 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 08 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இந்தநிலையில் மேலதிக மூன்று வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.