கிளிநொச்சி – உழவனூர் பகுதியில் கேரளக் கஞ்சாவுடன் முதியவர் கைது

0
86

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உழவனூர் பகுதியில் 1 கிலே 750 கிராம் கேரளக் கஞ்சாவுடன் 64 வயதான முதியவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உழவனூர் பகுதியில் இருந்து நேற்று மாலை கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில், குருநாகல் கொண்டு செல்வதற்காக குறித்த முதியவர் தனது பயண பொதியில் மறைத்து எடுத்துச் சென்றவேளை கைது செய்யப்பட்டார்.

தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைதான சந்தேகநபரிடம் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.