கிளிநொச்சி – பள்ளிக்குடாவிலில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு

0
112

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிக்குடா பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்ற சட்டவிரோத மரக்கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. கப் ரக வாகனம் ஒன்றில் பெறுமதி மிக்க பாலை மரக்குற்றிகளை ஏற்றிப் பயணித்த வாகனம் தொடர்பில், பூநகரி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 5 பாலைமரக் குற்றிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் பூநகரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.