கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் இருந்து, ஆடுகளை கூலர் வாகனத்தில் கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 ஆடுகளை சுகாதார வசதி, நீர், உணவு வசதி என்பவற்றை ஏற்படுத்திக் கொடுக்காமல் வாகனத்தை முழுமையாக மூடி கொண்டு சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான கால்நடை வைத்தியரின் அனுமதிப் பத்திரம் இன்றி அனுராதபுர மாவட்டத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டிலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரம் பொலிஸார் வீதிச் சோதனை மூலம் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.