கிளிநொச்சியில் இடம்பெற்ற வனஜீவராசிகள் வன பாதுகாப்பு திணைக்களத்தினரின் கலந்துரையாடல்!

0
69

கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பட்டுப்பாட்டில் காணப்படும் பொதுமக்கள் காணி மற்றும்மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அதலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி ரணசிங்க, வனவள பாதுகாப்பு நாயகம் நிசாந்த எதிரசிங்க உள்ளிட்ட வனஜீவராசிகள் மற்றும் வனவளத்திணைக்கள உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் மற்றும் அவற்றை விடுவிப்பதில் உள்ள சவால்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.