கிளிநொச்சியில் வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள் என்ற தொனிப்பொருளில் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.
கிளிநொச்சி பசுமைபபூங்காவில் நடைபெறும் கண்காட்சியில்; பெண்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் விற்பனையும் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் இந்தக் கண்காட்சி முன்னெடுக்கப்படுகின்றது.
காலை 08.30 முதல் இன்று மாலை 5 மணிவரை கண்காட்சி மற்றும் விற்பனை இடம்பெறுவதாக ஏற்;பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சு.முரளிதரன் கண்காட்சிக் கூடத்தை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தினர், பனை அபிவிருத்திச் சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலக முகாமையாளர், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பெண்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.