கிளிநொச்சி திருவையாறு பகுதியில், இரண்டு கிராம் 100 மில்லிக்கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
28 ஆம் திகதி, திருவையாறு பகுதியில், சந்தேகத்துக்கிடமாக சிலர் தங்கி இருப்பது தொடர்பில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பொலிசார் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன் போது, இரண்டு கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமையால், குறித்த வீட்டில் தங்கியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவுக்க அமைய, இரு நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணைகளின் அடிப்படையில், குறித்த வீட்டில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவர் அடையாளம் கானப்பட்டதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட நான்கு பேர், குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சந்தேக நபர், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.