கிழக்கு மாகாண தமிழ்
மாற்றுத்திறனாளி விளையாட்டு விழா

0
268

கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளி விளையாட்டு விழா எதிர்வரும் 24 25 திகதிளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இது அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற நோக்கோடு அனைத்து பிரதேச செயலக பிரதேச செயலாளர்கள் தலைமையில் பிரதேச செயலக மாற்றுத்திறனாளிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒலிம்பிக் தொடரோட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.

டேட்டா அமைப்பினாலும் மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தினாலும் ஒழுங்கு செய்யப்பட்ட ஆரம்ப நாள் நிகழ்வு வாகரை பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு கோறளைப்பற்றுமத்திய, கோறளைப்பற்றுமேற்கு, கோறளைப்பற்று, கோறளைப்பற்றுதெற்கு,ஏறாவூர்பற்று இறுதியாக ஒலிம்பிக் தீபம் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தை வந்தடைந்து முதல் நாள் ஒலிம்பிக் தொடரோட்டம் நிறைவடைந்தது. இரண்டாம் நாள் நிகழ்வாக ஒலிம்பிக் தீப தொடரோட்டம் மண்முனை மேற்கு,மண்முனை தென்மேற்கு,போரதீவுப்பற்று, மண்முனை தென் எருவில் பற்று,மண்முனை பற்று,காத்தான்குடி இறுதியாக மண்முனை வடக்கு பிரதேசெயலகமூடாக மட்டக்களப்பு காந்திபூங்காவில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வுகளில் அந்தந்த பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள்,உதவி திட்டமிடல் பதிப்பாளர்கள்,கணக்காளர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கௌரவ தவிசாளர்,பொதுமக்கள் ,பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள்,மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர். மக்களுக்கான விழிப்புணர்வும் ,விளையாட்டு விழாவில் பங்குபற்றலை அதிகரிப்பதும் நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.