கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நீர் ஆய்வு மையமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் ஆராய்வு

0
10

நீர் ஆபத்து மற்றும் இடர் நிர்வாகத்திற்கான சர்வதேச மையமாக செயற்படும் ஐஷார்ம் ஆய்வு நிலையத்துடன் இணைந்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் நீர்ஆய்வு மையம் ஒன்றிணை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்றைய தினம் மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம்,கிழக்கு பல்கலைக்கழகம்,விவசாய திணைக்களம்,கமநல அபிவிருத்தி திணைக்களம்,நீர்பாசன திணைக்களம்,விவசாய அமைப்புகள்,அனர்த்த முகாமைத்துவ நிலையம் போன்ற பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

நீர் ஆபத்து மற்றும் இடர் நிர்வாகத்திற்கான சர்வதேச மையமாக செயற்படும் ஐஷார்ம் ஆய்வு நிலையத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் அப்துல் வாஹீர் முகமட் றஸ்மி கலந்துகொண்டு ஐஷார்ம் ஆய்வு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமிறித்தார்.
கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி ஸ்ரீகாந்த், கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதிப்பணிப்பாளர் ஜெகநாத், நீர்பாசன திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மோகன்ராஜா, கிழக்கு மாகாண நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் சிவநேசன் உட்பட திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டனர்.