மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்துமாறு தெரிவித்து பாரிய மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கி எச்சரித்துள்ளது. எனவே, முறையான சரிபார்த்தலின்றி இனந்தெரியாத தரப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிட வேண்டாம் எனவும் அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்ப வேண்டாம் எனவும் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதுடன், அநாமதேய தகவல்கள் கிடைக்கப்பெற்றால், நிதியியல் உளவறிதல் பிரிவின்
011-24 77 125, 011-24 77 509 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.