குற்ற புலனாய்வு விசாரணையில் ஜெரோம் பெர்னாண்டோவின் நிதி முறைகேடுஅம்பலம்!

0
150

பௌத்த மதத்தை நிந்தனைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு நாணயங்கள் உட்பட பில்லியன் கணக்கான நிதிகள் அவரது உள்ளூர் வங்கிக் கணக்குகள் மூலம் தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட  விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் பணமோசடிச் சட்டத்தின் கீழ் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் பெற்றுக்கொண்ட, பெரும்பாலான நிதிகள், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பிற நெருங்கிய நண்பர்களிடம் இருந்து நன்கொடையாகப் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சிஐடியின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கட்டுநாயக்கவில் அவரது மத நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அவரது ஆதரவாளர்களில் குறைந்தது 18,000 பேர் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் உட்பட குறைந்தது ஏழு நாடுகளில் போதகரை பின்தொடர்பவர்கள் இருப்பதாகவும், அந்த நாடுகளில் இருந்து ஜெரோமின் பல உள்ளூர் கணக்குகளுக்கு நிதி வந்திருப்பதாகவும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.