27.1 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

குற்றப்பிரேரணையை கொண்டுவந்து ஜனாதிபதியை வெளியேற்றுவது என்பது சாதாரண விடயமல்ல!

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலைமையில், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவந்து அவரை வெளியேற்றுவது என்பது சாதாரண நடைமுறை கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கவனத்திற்கொண்டு செயற்படுமாறு அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு முன்கூட்டியே கூறிய தரப்பினர் நாம்.

நாம் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாததால் இவ்வாறான நெருக்கடியானது தீவிரமடையும் என்று முன்கூட்டியே நாம் அறிந்துகொண்டதால் மார்ச் மாதம் 2 ஆம் திகதி எமது 11 கட்சிகளும் விசேட மாநாட்டை நடத்தினோம்.

இந்த மாநாட்டில் உண்மை நிலவரத்தை மக்களுக்கு கூற வேண்டி ஏற்பட்டது. அந்த உண்மையை வெளிக்கொண்டு வந்ததன் காரணமாகவே நானும் உதய கம்மன்பிலவும் அமைச்சுப் பதவியிலிருந்து வெறியேற்றப்பட்டோம். அதனை மகிழ்ச்சியாக நாம் ஏற்றுக்கொண்டோம்.

அந்த இடத்திலிருந்து 11 கட்சிகளும் மிகவும் தீர்மானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles