கொங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதியினுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு!

0
7

கொங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவின் அரசியல் கட்சியை இடைநீக்கம் செய்து அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் கொங்கோ குடியரசின் ஜனாதிபதியாக செயற்பட்டிருந்தார். 53 வயதான அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களை அடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கொங்கோ குடியரசில் இயங்கும் எம்.23 என்ற ஆயுதக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் அவரது கட்சி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.அதேநேரம், தேசத் துரோக செயற்பாட்டில் ஈடுபட்டமைக்காக அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அந்த நாட்டு நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இது அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடென கொங்கோ குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலா தெரிவித்துள்ளார்.