ஆபிரிக்க நாடான கிழக்கு கொங்கோவில் 278 பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். கிடுகு துறைமுகம் அருகே சென்றபோது அதிக பாரம் தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்துள்ளது.
மீட்புக்குழுவினரால் தண்ணீரில் தத்தளித்த 10 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். படகு விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் சிலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.