இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்தார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்தது.
பிட்டபெத்தர பிரதேசத்தை சேர்ந்த 52 வயது ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இதேவேளை இலங்கையில் இன்றைய தினம் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.