கொரோனாவால் வீதியில் சடலங்கள்: பொய்ப் பிரசாரம் மேற்கொண்டவர் விளக்கமறியலில்

0
187

வீதிகளில் கிடைக்கும் சடலங்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இன்று சனிக்கிழமை காலை கடுகண்ணாவ பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.