கொழும்பில் நாளை மறுதினம் நீர் வெட்டு!

0
137

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 11,12,14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.