கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில், இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, ஒருவரின் உயிரிழப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், மற்றுமொரு மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி என்பன, கோனாபொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பிலியந்தலை பொலிஸார் தெரிவிதுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 6 கிராம் ஐஸ் மற்றும் 2 கிராம் கஞ்சாவும், அவர்களிடம் இருந்து, பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.