கொழும்பு வைத்தியசாலையில் கதிரியக்க படச்சுருள்களுக்கு பற்றாக்குறை!

0
111
Doctor diagnosing patient’s health on asthma, lung disease, COVID-19 or bone cancer illness with radiological chest x-ray film for medical healthcare hospital service

இலங்கையின் தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் எலும்பியல் சேவைப்பிரிவு என்பது இலங்கையில் முக்கிய நோய்களுக்கு சிகிச்சையளிக்கும், முதலாம் நிலை மையமாக செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் எலும்பியல் சேவைப்பிரிவு, பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பி.மேதிவத்த, தேசிய வைத்தியசாலையில் ஏற்கனவே முக்கியமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான கதிரியக்க அதாவது எக்ஸ்ரே படச்சுருள்கள் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவித்தார். கதிரியக்க படச்சுருள்களை வாங்க முடியாததால், புதிய கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அந்த முறையும் தோல்வியடைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவும், வெளிநோயாளர் பிரிவும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடியால் முழு அரசாங்க மருத்துவமனை அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.