கொவிட் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

0
128

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த 49 திரையரங்குகளில் 10 திரையரங்குகள் அடுத்த மாதம் மீண்டும் திறக்க தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திரைப்படக் கூட்டுத்தாபனம் ஈட்டிய வருமானம் 2019ஆம் ஆண்டை விட சடுதியாக குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 191 திரையரங்குகள் செயற்பட்டு வந்தன.
கொவிட் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறப்பு | சுநழிநniபெ ழுக வுhநயவநசள றுநசந ஊடழளநன னுரந வுழ ஊழஎனை
இந்நிலையைக் கருத்தில் கொண்டு திரையரங்கு உரிமையாளர்களுக்கு திரைப்பட மேம்பாட்டு நிதியின் மூலம் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திரைப்படத்துறையின் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.