கோட்டாவை சந்தித்த சுப்ரமணியன் சுவாமி!

0
166

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்,

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 15 ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ள ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய நண்பரான சுப்ரமணியன் சுவாமி, நேற்று மாலை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து அவரது இல்லத்தில் நவராத்திரி பூஜையில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்க சட்டத்தரணிகள் அடங்கிய குழுவுடன் சென்ற சுப்ரமணியன் சுவாமி, பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் எதிர்வரும் சனிக்கிழமை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.