கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் நீரிழிவு பரிசோதனை முகாம்

0
97

உலக நிரிழிவு தினத்தை முன்னிட்டு கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் நீரிழிவு பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமை யாழ்ப்பாணம் நீரிழிவுக்கழகம் மற்றும் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்து நடாத்தியிருந்தனர்.

இந்த பரிசோதனை முகாமை தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்ரமணியம். பரமானந்தம் ஆரம்பித்து வைத்தார்.

இந்த முகாமில் நீரிழவு பரிசோதனை, இரத்த அழுத்தம், உடல் திணிவுச்சுட்டி போன்றவை பரிசோதிக்கப்பட்டன.

நிகழ்வில் கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.