சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் 22 பேர் கைது

0
14

காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான இரு இந்தியப் பிரஜைகளிடம் முன்னெடுத்த விசாரணையின் பின்னர் இராஜகிரிய பகுதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.