சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொகுதியை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

0
7

சந்தைக் கேள்வியை பூர்த்தி செய்வதற்காக அளவுசார் மற்றும் பண்புசார் இரு பிரிவுகளிலும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், அவை வெற்றியளிக்கவில்லை.     

அப்பணிகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வேறுவேறாக அரச தொழில்முயற்சியாக சப்புகஸ்கந்த எண்ணெய்ச் சுத்திகரிப்பை நிறுவி பொருத்தமான மூலோபாய முதலீட்டுப் பங்காளரை அடையாளங் காண்பதற்கும், திருகோணமலைப் பிரதேசத்தல் புதிய எண்ணெய்ச் சுத்திகரிப்பை நிறுவுவதற்கான இயலுமைகளைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், இதுவரை அதுதொடர்பாக எவ்வித படிமுறைகளும் மேற்கொள்ளப்படவில்லை.    

சமகால அரசின் வலுசக்திக் கொள்கைச் சட்டத்தின் கீழ் பேணப்படும் சுத்திகரிப்பு நவீனமயப்படுத்தல் அல்லது புதிய சுத்திகரிப்பை நிர்மாணித்தல் முதன்மைப் பணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது.    அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சாத்தியவளக் கற்கையின் அடிப்படையில் பொருத்தமான முதலீட்டுப் பங்காளர்களை அடையாளங் காண்பதற்கான விருப்பக் கோரலுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

அதற்கமைய, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பை அபிவிருத்தி செய்தல் மற்றுத் குறித்த வளாகத்திலேயே நிர்மாணித்தல், செயற்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையில் நாளொன்றுக்கு 100,000 பரல்கள் கொள்ளளவுடன் கூடிய புதிய சுத்திகரிப்பை நிறுவுகின்ற கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விருப்பக்கோரலை மேற்கொள்வதற்கும், தகைமைகளைப் பூர்த்தி செய்கின்ற நிறுவனத்திடம் கருத்திட்ட முன்மொழிவுகளைக் கோருவதற்கும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.