சர்வகட்சி மாநாட்டை தமிழ் முற்போக்குக் கூட்டணி புறக்கணிப்பு

0
163

இன்று மாலை நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கலந்துகொள்ள போவதில்லை என்று கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேசுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதாகவும் இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்தே இந்த மாநாட்டை புறக்கணிப்பதற்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.