இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில், பங்கேற்கவுள்ள மட்டக்களப்பு காத்தான்குடி ஹிழுறிய்யா பாடசாலை மாணவன் ஏ.எஸ்.ஷராப் அஹமட்ரினை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர் யசீர் அறபாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி ஹக்கீம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மாணவனுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.