சவுதி ஏர் லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடிப்பு!

0
49

சவுதி ஏர் லைன்ஸ் விமானம், பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இந்த தீ விபத்து ஏற்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், தீ விபத்து ஏற்பட்ட போதும், உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட போது, உடனடியாக, விமானத்தில் இருந்த 276 பயணிகளும், 21 பணியாளர்களும், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும், தீ விபத்தினால், 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த, பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணையக அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.