சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

0
8

2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் http://www.doenets.lk மற்றும்  http://www.results.exams.gov.lk தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 98 ஆயிரத்து 182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.