சிகரெட் விடயத்தில் கனடாவின் தனித்துவமான தீர்மானம்

0
144

புகையிலை கட்டுப்பாட்டை குறைக்க கனடா விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகத்தை அச்சிட முடிவு செய்துள்ளனர்.

“புகையிலை புற்றுநோயை உண்டாக்குகிறது” மற்றும் “ஒவ்வொரு சிகரெட்டிலும் விஷம்” ஆகியவை கனடா அச்சிட விரும்பும் இரண்டு எச்சரிக்கை வாக்கியங்கள்.

இதனை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் அச்சிட கனடா முடிவு செய்துள்ளது.

இளையோர் சிகரெட் பயன்படுத்துவதை தடுப்பதே இதன் நோக்கம் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது.

2026க்குள், ஒவ்வொரு சிகரெட்டிலும் மேலும் 06 எச்சரிக்கை வாக்கியங்கள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 2035ம் ஆண்டுக்குள் சிகரெட் பயன்பாட்டை 5 சதவீதமாக குறைக்க கனடா முயற்சித்து வருகிறது.