சிகிரியாவில் காசியப்ப மன்னன் வாழ்ந்த குளிர் மாளிகை திறப்பு!

0
220

வரலாற்று சிறப்பு மிக்க சிகிரியாவில் காசியப்ப மன்னன் வாழ்ந்த ‘குளிர் மாளிகை’ எதிர்வரும் மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக திறக்கப்படும் என மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார். வரட்சியான காலங்களில் இந்த குளிர் அரண்மனையை காசியப்ப மன்னன் பயன்படுத்தியதாக வரலாற்றில் கூறப்படுகின்றது. அரண்மனையை சுற்றியுள்ள வடிகால் காரணமாக அதை அணுக முடியாதுள்ளதுடன், கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிர் மாளிகையை பார்வையிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.