சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள சிறையில் 850 குழந்தைகள்

0
152

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள சிறையில் சுமார் 850 குழந்தைகள் சிக்கியுள்ளதாக ஐ.நாவின் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சுமார் 3,500 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து பல ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பியோடிய நிலையில், சிறையை கட்டுப்படுத்துவதில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் குர்திஷ் படையினருக்கும் கடந்த 6 நாட்களாக மோதல் நிலவுகிறது.
இந்த மோதலால் 200இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், 45,000இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹசாக்கா நகரிலுள்ள குவைரான் சிறை உள்ளிட்ட அடிபடை வசதிகள் இல்லாத பல தற்காலிக சிறைகளில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை குர்திஷ் படையினர் அடைத்து வைத்துள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன