சிறைச்சாலைகளில் 524 பேருக்கு தொற்று

0
190

கடந்த ஏழு நாட்களில் சிறைச்சாலைகளில் 524 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வாரங்களில் சிறைச்சாலை கொத்தணி குறைவடைந்திருந்தாலும் தற்போது அதிகரித்துவருவதாக தொற்றுநோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 6ஆம் திகதி 240 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர என்றும் மேற்படிப் பிரிவு தெரிவித்துள்ளது.