சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருள் வைத்திருந்த 14 பேர் கைது!

0
70

சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லதண்ணி, மஸ்கெலியா, பொல்பிட்டி, நோர்ட்டன்பிரிஜ், கினிகத்ஹேன மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மற்றும் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.