சீன பொருட் குவிப்பை தடுப்பதற்கு இந்தியா நடவடிக்கை!

0
13

முக்கிய வர்த்தக கூட்டு நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிகளின் எதிரொலியால், சீனப் பொருட்களின் இறக்குமதி மீது இந்தியா கண்காணிப்பை கடுமையாக்குகிறது.

சமீபத்தில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புதிய பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். இது பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் மதிப்பு வரிகளை விதித்தது. 34 சதவீதம் என்ற அதிக வரி விதிப்பால், சீனா கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

இது அமெரிக்காவுக்கான சீன இறக்குமதிகள் மீது ஏற்கனவே உள்ள 20 சதவீதத்துடன் இணைந்து, மொத்த வரி 54 சதவீதமாக உயர்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால், சீனா தன் ஏற்றுமதிகளைஇந்தியாவுக்கு  திருப்பி விடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.