சீனாவிலிருந்து வரும் பொருட்களிற்கு பத்து வீத வரி – டிரம்ப் அறிவிப்பு

0
6

சீனாவை இலக்கு வைத்து மேலும் வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பெப்ரவரி முதலாம் திகதி முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களிற்கும் பத்துவீத இறக்குமதியை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் மெக்சிக்கோ கனடாவிலிருந்து வரும் பொருட்களிற்கு 25 வீத வரியை விதிக்கப்போவதாக அறிவித்திருந்த ஜனாதிபதி பின்னர் சீன பொருட்கள் மீதான வரிகள் குறித்துஅறிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து வரும் அனைத்து பொருட்களிற்கும் 60 வீத வரியை விதிப்பேன்  ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் தெரிவித்திருந்தார்.

சீனாவிலிருந்து மெக்சிக்கோ கனடா வழியாக அதிகளவு பெண்டானையில் வருகின்றது என தெரிவித்துள்ள டிரம்ப் வரிகளை அதிகரித்தால் சீனா இந்த ஆபத்தான போதைபொருளை கட்டுப்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.