சீரற்ற காலநிலையால், ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு, அரசாங்கம் நஸ்டஈடு வழங்க வேண்டும் என திருகோணமலை மூதூர் பிரதேச மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடல்சீற்றம், காற்று, மழை காரணமாக மூதூர் கடற்கரையில் இருந்த மீன்வாடிகள், மீன்கள் உலர வைக்கும் பறன்கள் உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளன.
இதனால் பொருளாதார பின்னடைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில இடங்களில் கடலரிப்பு காரணமாக, மீன்பிடி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி, தமக்கு நஸ்டஈடு வழங்க முன்வர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.