சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்

0
8

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விழுந்துள்ளது.இதனால் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த 30க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்குண்டு இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த நாகர்கர்னூல் மாவட்டத்தின் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஸ்ரீசைலம் நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள சுரங்கப்பாதையில் வழமைபோல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தின் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.